Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்வு...
04:49 PM Apr 07, 2025 IST | Web Editor
Advertisement

சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று தெரிவித்தார். மானிய விலை மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எல்பிஜியின் விலை 500லிருந்து 550 ஆகவும், உஜ்வாலா அல்லாத பயனர்களுக்கு 803லிருந்து 853 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளைமுதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags :
Cooking Gasprice hikeUnion Oil Minister Hardeep Singh Puri
Advertisement
Next Article