Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்ச்சையில் சிக்கிய நடிகர் யாஷின் #Toxic திரைப்படம்... காரணம் என்ன?

09:41 PM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் யாஷின் 'டாக்சிக்' படத்தின் செட் அமைக்க பெங்களூரில் 100 மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப், கே.ஜி.எப் 2 படங்களின் மூலம் பிரபலமானவர் யாஷ். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததுடன், வசூலையும் வாரி குவித்தது. இதனைத் தொடர்ந்து யாஷ் தனது 19வது படமான டாக்சிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கவுள்ளது. இந்த நிலையில், டாக்சிக் திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது, 'டாக்சிக்' படத்திற்காக 100 மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே குற்றஞ்சாட்டியுள்ளார். அதன்படி, 'டாக்சிக்' படத்தின் செட் அமைக்க பெங்களூரில் 100 மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாகவும், மரங்களை வெட்டியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே கடிதம் எழுதியுள்ளார்.

Tags :
Actor YashcinemaGeetu Mohandaskannadamovienews7 tamilToxicyash
Advertisement
Next Article