சர்ச்சை பேச்சு - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!
சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இன்று பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,
“கடந்த வாரம் நடந்த மூன்றரை வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குழந்தையே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி காலையில் அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்” எனக் கூறினார்.
மூன்றரை வயது சிறுமி, சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.