Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்ச்சை பேச்சு | துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடியை நீக்கி திமுக தலைமை அதிரடி!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு எதிரொலியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டுள்ளார்.
11:29 AM Apr 11, 2025 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஏப்.6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அவரின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : “போகிறேன்.. நான் போகிறேன்.. ” – விண்ணை முட்டும் தங்கம் விலை… ஒரு சவரன் இவ்வளவா?

அந்த வகையில், திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பதவியி ல் இருந்து பொன்முடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article