Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாதகவினர் எதிர்த்த ‘ஜாட்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!

‘ஜாட்’ திரைப்படத்தில் தேவாலயம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது.
09:51 PM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கம் மற்றும் சன்னி தியோல் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான பாலிவுட் திரைப்படம்  ‘ஜாட்’. இப்படம் உலகளவில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படம் இலங்கை தமிழர் விடுதலை போராட்டை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து நாதகவினர் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்களை முற்றுகையிட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இப்படி ஒருபக்கம் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்க, இப்படத்தின் டிரெய்லரில் சில சர்சைக்குறிய தேவாலய காட்சிகள் இடம்பெற்றிப்பதாக கூறி கிறிஸ்தவ சமூக மக்கள் படத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் ‘ஜாட்’ படத்திலிருந்து சர்ச்சைக்குரிய தேவாலய காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. இது குறித்து படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. உடனடியாக அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எந்த மத உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். யாருடைய நம்பிக்கைகள் புண்பட்டதோ அவர்களிடம் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChristianschurchJaat MovieNTKSeeman
Advertisement
Next Article