Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.45,000 கோடியில் 156 ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம்!

07:10 AM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.45,000 கோடியில் 156 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் கொள்முதல் ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது.

Advertisement

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் (ஹெச்ஏஎல்) இருந்து இந்த ஹெலிகாப்டா்கள் வாங்கப்பட உள்ளன. ராணுவ பயன்பாட்டுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் 156 பிரசந்த் ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு ஒப்புதல் அளித்தது. இதில் 90 ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்காகவும், 66 ஹெலிகாப்டர்கள் விமானப் படைக்காகவும் வாங்கப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டர்களில் 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் இடம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : நடைபாதையில் தூங்கியவர் மீது சொகுசு காரை ஏற்றி உயிரிழப்புக்கு காரணமான ஆந்திர எம்.பி. மகளுக்கு ஜாமின்!

இந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு ஆயுதங்களைத் எடுத்து சென்று தாக்கும் திறனுடையது. எதிரிகளின் கவச வாகனங்கள், பதுங்கு குழிகள், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் உள்ளிட்ட இலக்குகளையும் இந்த ஹெலிகாப்டர் மூலம் அழிக்க முடியும். இரவு நேரத் தாக்குதலுக்கு பயன்படுவதுடன், உயர மலைச் சிகரங்களையும் கடக்கும் வகையில் அதிக உயரத்திலும் இதனால் பறக்க முடியும். உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினையும் இதனால் எட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
Air ForcehelicoptersHindustan Aeronautics CorporationIndian ArmyMinistry of Defense
Advertisement
Next Article