Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் மழை எதிரொலி | தேர்வுகளை ஒத்திவைத்த அண்ணா பல்கலைக்கழகம்!

08:31 AM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

மழை வெள்ள பாதிப்பால் மூன்று மாவட்டங்களில் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பால் மூன்று மாவட்டங்களில் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வெள்ளம் பாதித்துள்ள நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 19) நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மழை வெள்ள பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

Advertisement
Next Article