Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை எதிரொலி - திருநெல்வேலியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

01:35 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், மழைக்கால அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

அதேபோல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நீர்நிலைகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி

Tags :
Emergency ContactEmergency NumberKanyakumariNellaiNews7Tamilnews7TamilUpdatesReliefSOSSouth TamilnaduTamilnadu RainsThoothukudiTirunelveliWeather
Advertisement
Next Article