Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை எதிரொலி! நாகப்பட்டினம் சென்ற பேரிடர் மீட்பு படையினர்!

09:46 PM Nov 30, 2023 IST | Web Editor
Advertisement

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பேரிடர் மீட்பு படையினர் நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளனர்.

Advertisement

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்ககடலில் ஏற்பட்டுள்ள
காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை பரவலாக பெய்து வருகிறது.  மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!

கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்குச் சொல்லவில்லை.  இந்த நிலையில் தொடர் மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

ஆவடியில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் சூசைராஜ் தலைமையில், தலா 27 பேர் கொண்ட இரு குழுவினர் சென்றுள்ளனர்.  அவர்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 15 வகையான மீட்பு உபகரணங்களை உடன் எடுத்து சென்றுள்ளனர்.  அவர்கள் நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத்தின் தாழ்வான பகுதி மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை காலை ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags :
Disaster ManagementHeavy rainNagapattinamnews7 tamilNews7 Tamil UpdatesRaintamil nadu
Advertisement
Next Article