Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடரும் போர் | தெற்கு லெபனான் மக்களுக்கு #Israel எச்சரிக்கை!

07:25 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. 

இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : சீனாவின் #SpiderWoman… பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மலையில் ஏறி சாதனை படைத்த பெண்!

இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனின் காஸாவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா அருகிலுள்ள ஷேக் ரவடான், தெற்கு ஜபாலியா முகாமிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர். அதோடு, தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளதாவது:

”இஸ்ரேல் ராணுவத்தினர் உங்களின் கிராமங்கள் மற்றும் இருப்பிடங்கள் அருகிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் தங்குமிடங்களைக் குறிவைத்து வருகின்றனர். அதனால், மறு அறிவிப்பு வரும்வரை உங்களின் சொந்த பாதுகாப்புக்காக உங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென எச்சரிக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
IsraelNews7Tamilnews7TamilUpdatesPeopleSouth LebanonwarWarn
Advertisement
Next Article