Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி எல்லையில் தொடரும் பதற்றம்; 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்!!

07:01 AM Feb 17, 2024 IST | Web Editor
Advertisement

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.  

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.

தடையை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசி தடுத்தனா். இப்போராட்டத்தின்போது 63 வயது விவசாயி ஒருவா் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மீண்டும் பேச்சுவாா்த்தை: விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோா் சண்டீகரில் வியாழக்கிழமை 3-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணிநேரம் நடைபெற்ற இப்பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெறவுள்ளது.

விவசாய அமைப்பான சம்யுக்த கிஸான் மோா்ச்சா சாா்பில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்துக்கு பஞ்சாபில் பெருமளவிலும், ஹரியாணாவில் பகுதியளவிலும் ஆதரவு காணப்பட்டது. ஹரியாணாவில் பல இடங்களில் சாலை மறியல்கள் நடத்தப்பட்டன.

கடந்த 2020-21-ஆம் ஆண்டில் விவசாயிகளின் போராட்டத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பிரதமா் மோடி அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகள் பிரச்னையில் அரசு வேண்டுமென்றே மெத்தனம் காட்டுகிறது. எனவே, வரும் நாள்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று சம்யுக்த கிஸான் மோா்ச்சா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Advertisement
Next Article