Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நடவடிக்கை -வெள்ளை மாளிகை தகவல்!

09:28 AM Feb 17, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மற்றும் இந்திய அமெரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வெள்ளை மாளிகை பதிலளித்துள்ளது.

Advertisement

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 29-ம் தேதி இந்திய மாணவரான விவேக் சைனி, ஜார்ஜியாவின் லித்தோனியாவில், ஒருவர் சுத்தியலால் தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். ஜனவரி 30-ம் தேதி, பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா காணாமல்போன சில நாள்களில், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வாரம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சையத் மசாஹிர் அலி, கடந்த 4-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளானர் எனத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த விவகாரங்கள் தொடர்பாகச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய, அமெரிக்கா வெள்ளை மாளிகையில் உள்ள தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியி,``நிச்சயமாக இனம், பாலினம், மதம் அல்லது வேறு எந்த காரணிகளையும் அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது.

அமெரிக்காவில் இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளவும் முடியாதது. அந்த வகையான தாக்குதல்கள் நடக்காமல் இருக்கவும், இதுபோன்று சிந்திப்பவர்களின் சிந்தனையைத் தெளிவுபடுத்தவும் அதிகாரிகளுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறோம். அதிபர் ஜோ பைடனும் அவரது இந்த நிர்வாகத்தினரும் மிக கடினமாக உழைத்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
Next Article