Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் விடுமுறை - #Chennai -ல் இருந்து சொந்த ஊர் சென்றோர் எத்தனை பேர் தெரியுமா?

06:59 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

தொடர்விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் மூலம் 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Advertisement

ஆயுத பூஜையொட்டி இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் தங்கி படிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் முதல் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதிகளவிலான மக்கள் தங்கள் சொந்து ஊர்களுக்கு சென்றதால் நேற்று பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஊர்களுக்கு படையெடுத்த படியே இருந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தின் படி நேற்று (செப். 10) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் என மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் பயணித்துள்ளனர்."

இவ்வாறு மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
Ayudha pujaBUSChennaiholidaynews7 tamilspecial bus
Advertisement
Next Article