Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திடீரென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போட்டியாளர்… #BiggBoss-ல் நடந்தது என்ன?

11:47 AM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

டாஸ்கின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக பிக் பாஸ் போட்டியாளர் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 7 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் நடிகர் ரஞ்சித் ஒருவரை தவிர சின்னத்திரை பட்டாளங்கள் களமிறங்கியது. ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிருப்தியை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

உள்ளே நுழைந்த 18 போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கப்போகிறோம் என்று அதிரடியாக 6 வைல்ட் கார்ட் என்ட்ரியை களமிறக்கினர். ஆனால் அப்போதும் ஆட்டத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் எஞ்சவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா, அர்னவ், சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார், என அடுத்தடுத்து குறைவான வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினர்.

பொம்மை டாஸ்க், டெவில் Vs ஏஞ்சல் என்று சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை சுவாரஷ்யம் குறைவாக விளையாடியுள்ளனர் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், பிக் பாஸில் நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றில் ராணவை தடுத்த ஜெஃப்ரி ஒரு கட்டத்தில் அவரை கீழே தள்ளினார். இதில் காயமடைந்த ராணவ் வலியால் துடுத்தார். அப்போது மற்ற போட்டியாளர்கள் அவர் நடிப்பதாக கூறினர்.

இதற்கிடையே விஷால், அருண் உள்ளிட்டோர் ராணவை மருத்து அறைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராணவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ராணவ் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், அவர் சில நாட்களுக்கு டாஸ்கில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடந்த பொம்மை டாஸ்கின்போது ஜெஃப்ரி, ராணவ் மற்றும் ரயான் ஆகியோர் அடித்துக் கொண்ட நிலையில் அதற்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதி எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ள ஜெஃப்ரி, இதனை வேண்டுமென்று செய்தாவாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அவ்வாறு அவர் வேண்டுமென்று தள்ளிவிட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி, ஜெஃப்ரிக்கு எச்சரிக்கை அட்டையை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Next Article