Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்: ரூ.30,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

04:01 PM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

கழிப்பறைக்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில்  30 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.  இந்த கட்டண கழிப்பறை சிறுநீர் கழிக்க கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது.  இந்த நிலையில் ஒரு ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் வாங்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சுந்தரம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 ரூபாயில் 4 ரூபாயை திரும்ப தரவும்,  20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும்,  மேலும் வழக்கு செலவு 10 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இதை நகராட்சி ஆணையாளர் மற்றும் குத்தகைதாரர் இருவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்கவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
#public toiletconsumer courtExtra AmountPay and Use ToiletToilet
Advertisement
Next Article