"இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்" - பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும்" என தெரிவித்துள்ளார்.