Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நீண்டகால நண்பரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்” - விஜய்யின் தவெக மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

03:03 PM Oct 27, 2024 IST | Web Editor
Advertisement

“விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என தவெக முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

விஜய் எனது நீண்டகால நண்பர். அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். நான் தயாரித்த முதல் படம் அவருடையது தான். எந்த கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை. கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு முன் பல கட்சிகள் வந்திருக்கிறது, போயிருக்கிறது.

மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். கொள்கைகள் முக்கியம். மக்கள் பணியில் எப்படி ஈடுபடப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்” என தெரிவித்தார்.

Tags :
DMKTVK ConferenceTVK VijayUdhayanidhi stalinvijay
Advertisement
Next Article