Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் இன்று மாநாடு- கடைகள் அடைப்பு ...

08:11 AM May 05, 2024 IST | Web Editor
Advertisement

மே 5ஆம் தேதியான இன்று வாரத்தின் கடைசி நாளான ஞாற்று கிழமை அன்று மதுரையில் விடுதலை முழக்க மாநாடாக 41-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது.

Advertisement

இந்த மாநாட்டில் வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை குறித்தும், மேலும் வணிகர்கள் மீதான அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்பதை குறித்தும் பேசும் மாநாடாக இந்த விடுதலை முழக்க மாநாடு இன்று நடைபெறுகிறது.

குறிப்பாக வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள், உயர் அதிகாரிகளால் ஏற்பட கூடிய பிரச்சனைகள் என வணிகர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கிலும் இந்த விடுதலை முழக்க மாநாடானாது இன்று நடைபெறுவதாக கூறப்படுகிறது. 41-வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வணிகர்கள் ஒன்று கூட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல இந்த மாநாட்டில் தங்க சங்கிலி தொடர் விற்பனையாளர்கள், மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து சங்கிலி விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் சாமானிய வணிகர்கள் பலரும் பாதிப்படைகின்றனர். இதை கருத்தில் கொண்டு இந்த மாநாட்டில் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு தீர்மானங்களும் எடுக்க உள்ளதாகவும் அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அதனை சட்டமாக்க வேண்டுமென கோரிக்கைகளையும் வைக்க உள்ளதாக வணிக சங்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், பல்வேறு தீர்மானங்கள், திட்டங்களை வகுப்பதற்கு 41-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இதனால் இன்றை தினம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், மொத்த வணிக நிறுவனங்கள், சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட், உணவகங்கள், பெரிய மால்கள் என அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article