கந்த சஷ்டி விழா நிறைவு நாள் - சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்...
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்
ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஆறு நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து, கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்கார வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும், கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.