Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜிப்ரான் இசையில் பாடிய தேவா! வெளியாகிறது ‘போட்’ திரைப்படத்தின் 2வது பாடல்!

04:08 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள போட் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 

Advertisement

வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிம்பு தேவன். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார்.

அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் வங்கக் கடல் கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். இதன் புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Tags :
BoatDevaGauri KishanGhibransimbu devanYogi Babu
Advertisement
Next Article