Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வடக்கு காசாவில் ஹமாஸின் கட்டமைப்புகள் முற்றிலும் அழித்துவிட்டது” -இஸ்ரேல் ராணுவம்

07:21 AM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய, தெற்கு காசாவிலும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும் போது,

வடக்கு பகுதியில் ஹமாசின் ராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம். தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். தெற்கு காசாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மத்திய, தெற்கு காசாவில் ஹமாசை அழித்து ராணுவம், வேறு வழிகளில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Next Article