Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீக்கியர்கள் குறித்த கருத்து - #RahulGandhiக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக எச்சரிக்கை!

03:13 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

சீக்கியர்கள் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அங்குள்ள மக்களிடம் அவர் உரையாடல் நடத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக அங்குள்ள மக்களிடம் பேசிய ராகுல் காந்தி “ பாஜகவுக்கு எதிராக நாம் நடத்தும் போராடும் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது வெறுமனே அரசியல் ரீதியான போராட்டம் மட்டுமல்ல.

உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள்? சீக்கியர்கள் இனி இந்தியாவில் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா ? அவர்கள் குருத்வாராவுக்கு செல்ல முடியுமா? இல்லையா என்பதுதான்தான் தற்போது நாம் போராடும் போராட்டம்” என்று வர்ஜீனியாவில் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்வினை கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..

“ 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் டெல்லியில் நடந்த கலவரத்தின்போது 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தலைப்பாகை கழற்றப்பட்டது, முடி வெட்டப்பட்டது, தாடி துண்டிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தக் கொடூரமான நிகழ்வு நடந்தது. இது குறித்து ராகுல் காந்தி எதுவும் கூறமாட்டார்.

சீக்கியர்களைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை இந்தியாவில் வந்து மீண்டும் பேசட்டும். அப்படிச் செய்தால் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன், அவரை நீதிமன்றத்தின் படிகளில் ஏற வைப்பேன்" என்று ஆர்பி சிங் கூறியுள்ளார்.

Tags :
Rahul gandhiRP Singsikh RemarkUS
Advertisement
Next Article