Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

09:53 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள ஆர். மகாதேவன் சென்னையில் கடந்த 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி பிறந்தவர். இவர் 1989 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து தனது சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சிவில் மற்றும் கிரிமினல் மற்றும் ரிட் தரப்புகளில் 25 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றவர். மேலும் வரிகள் தொடர்பான விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

இதையும் படியுங்கள் : திமுக கூட்டணியின் வெற்றி ரகசியம் என்ன? மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும், இந்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி 9,000 மேற்பட்ட வழக்குகளை நடத்தியுள்ளார். அதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து இவர் கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chief Justice R. MahadevanCollegiumJustice Kotiswar SinghMadras High CourtSupreme Court Judge
Advertisement
Next Article