இந்து மாணவியிடம் பேசியதற்காக முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்!
09:49 AM Mar 21, 2024 IST
|
Web Editor
புகாரில், அவரும் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக இந்து மாணவி ஒருவரும் நட்பாக பழகி வந்ததாகவும், இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் இருவரும் பேசி வருவது அந்த மாணவியின் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் கோபமடைந்த அவர்கள் தன்னை கடத்தி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் புகாரின் அடிப்படையில், யாத்கிர் பகுதியைச் சேர்ந்த மல்லு, தாயப்பா, ஷிவுநாயக், ரூபேஷ், அம்பரேஷ், ஹர்ஷகவுடா, பவன் குமார், ஜம்பு சோலங்கி மற்றும் பாபு சோலங்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மூன்று பேர் அந்த பெண்ணின் வீட்டைச் சார்ந்தவர்களாவர்.
Advertisement
கர்நாடகாவில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது வகுப்பின் சக இந்து மாணவியிடம் பேசியதால், 9 கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் 18 வயதான வாஹீத். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சிறுபான்மை சமூகத்தை சார்ந்த இவரும், அதேப் பக்குதியை சேர்ந்த இந்து மாணவி ஒருவரும் நட்பாக பழகி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி வாஹீத்தை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தியுள்ளது. பின்னர் 5 மணி நேரமாக ஒரு அறையில் வைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து மார்.19 ஆம் தேதி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வாஹீத் புகார் அளித்துள்ளார்.
Next Article