Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வு - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

03:06 PM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன் கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு,  முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு,  முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாக தேர்வு நடைபெற உள்ளது.  மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு (TN Semester Exams 2024) எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.  இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ’’தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு,  அதை அடிப்படையாகக் கொண்டு,  செமஸ்டர் தேதிகள் அறிவிக்கப்படும்.  அதே போல தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’’

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article