ஒரே நாளில் ஒகேனக்கலில் ஏற்பட்ட சரிவு - பரிசல் இயக்க தடை!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரே நாளில் கடுமையாக சரிந்துள்ளது நேற்று (ஜூலை 20, 2025) மாலை நிலவரப்படி வினாடிக்கு 43,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூலை 21, 2025) காலை நிலவரப்படி 23,000 கன அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்தில் சுமார் 20,000 கன அடி சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீர்வரத்து தற்போது வினாடிக்கு 24,000 கன அடியாக மேலும் சரிந்துள்ளது. இந்த திடீர் சரிவு காரணமாக,
வழக்கமாக, நீர்வரத்து குறையும்போது பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், தற்போது நீர்வரத்து கடுமையாக குறைந்ததில், மாவட்ட நிர்வாகம் 2-வது நாளாகப் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததே இந்த நீர்வரத்துக் குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. நீர்வரத்து மேலும் குறையுமா அல்லது மீண்டும் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்து, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும்.
சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒகேனக்கல்லுக்கு வரும் பயணத்தைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.