Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவை வெள்ளலூர் தீ விபத்து: தீயணைப்பின் போது தேநீருக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

12:52 PM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைப்பதற்கான கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Advertisement

கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது.இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடமருகே கடந்த 6.04.2024 முதல் 17-04-2024 ஆம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றியது. அப்போது, விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும் டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் :

"கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 99 ல் உள்ள
மாநகராட்சி உரக்கிடங்கில் கடந்த 06.04.2024 முதல் 17.4.2024ம் தேதி வரை கட்டுக்கடங்காமல் தீ பற்றியது. இதனை அணைக்க அவசர அவசியம் கருதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 57 (7) மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 235(3)ன் கீழ் தீயணைப்பு பணியை மேற்கொள்ள தீயணைப்பு துறை, மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், காவல்துறை மற்றும் மருத்துவகுழு, அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேற்படி பணி தொய்வில்லாமல் நடைபெற ஏதுவாக பார்வை 3-ல் காணும் ஆணையாளரின் உத்திரவின் படி அவசர அவசியம் கருதி போதுமான வாகனங்கள் மாநகராட்சி வசம் இல்லாததால் Hitachi, Tanker, போன்ற தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுத்து உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் JCP Sullage லாரி. jetling machine வாகனங்களுக்கு மசல் பெட்ரோல், கீரிஸ், oil ஆகியவை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட வகையில் செலவினம் மற்றும் அங்கு பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு உணவு, டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் (Food, Tea, Coffee and Cool drinks etc) ஆகியவை வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : வெளியானது தனுஷின் 50-வது படமான ராயன்! திரையரங்கில் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

இதற்கான செலவின விபரம் :

தற்சமயம் உரக்கிடங்கு பகுதியில் தீ அணைக்கப்பட்டு தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி பணியின் அவசர அவசியம் கருதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 57 (7) மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 235(3) கீழ் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.76,70,318/- செலவினம் மேற்கொள்ளப்பட்டு தீயணைக்கப்பட்டதன் விபரம் மாமன்றத்தின் பார்வைக்கும் பதிவிற்கும் பொருள் வைக்கப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Coimbatoregarbage dumpHitachiTankerterrible fireVellalur
Advertisement
Next Article