காபித்துாள் விலை உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
காபி கொட்டை விளைச்சல் பாதிக்கப்பட்டதால் காபித்துாள் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் காபி விளைச்சல் அதிக அளவில் உள்ளது. இருப்பினும் சர்வதேச அளவில் காபி விளைச்சலில், இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீத அளவு தான் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் காபி நுகர்வும் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக, உலக அளவில் காபி மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையே, இங்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக சர்வதேச மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு, இங்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது காபித்துாள் விலை கிலோவுக்கு, ரூ.100 முதல், ரூ.200 வரை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல காபி துாள் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தி உள்ளன. சிறு நிறுவனங்கள் காபித்துாள் விலையை உயர்த்த துவங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விலை குறைவாக இருக்கும் என்பதால், சிறு வியாபாரிகள் ரொபாஸ்டாவை அதிகம் பயன்படுத்துவர். ஆனால் தற்போது அதன் விலையும் அதிகரித்துள்ளதால், கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அடுத்த ஆண்டு வரை ரொபாஸ்டா விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
இதனால் விலை குறையவும் வாய்ப்பில்லை. இதனால், காபி உற்பத்தியாளர்கள் ரூ.100 முதல் ரூ.200 வரை விலையை அதிகரித்துள்ளனர். பியூர் காபித்துாள் கிலோவுக்கு ரூ.700 முதல் ரூ.850 வரையும், 20 சதவீதம் சிக்கரி கலந்த காபித்துாள் கிலோவுக்கு ரூ.550 முதல் ரூ.700 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.