Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை அதிகரிக்கலாம்! - நிபுணர்கள் கணிப்பு...

09:11 AM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.4 முதல் 6 வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

நகர்ப்புற சில்லறை விற்பனையாளர்களுக்கு மலிவான உள்நாட்டு இயற்கை எரிவாயு விநியோகத்தை அரசாங்கம் 20% வரை குறைத்துள்ளது. இந்நிலையில் எரிபொருளுக்கான கலால் வரியை குறைக்காவிட்டால், வாகனங்களுக்கு வழங்கப்படும் சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.4 முதல் 6 வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இருந்தும் திரட்டப்படும் மூலப் பொருள் சிஎன்ஜி எரிவாயுவாக மாற்றப்படுகிறது. இதைத்தொடா்ந்து வீடுகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு சிஎன்ஜி விற்பனை செய்யப்படுகிறது. இந்த எரிவாயுவின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி வரும் நிலையில், உற்பத்தி சரிவு காரணமாக நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்களுக்கு அந்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது.

இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு இறக்குமதி செய்யப்படும், அதிக விலை கொண்ட எல்என்ஜி எரிவாயுவை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையுடன் சில்லறை விற்பனையாளா்கள் விவாதித்து வருவதால், தற்போது அந்த எரிவாயுவின் விலையை அவா்கள் உயா்த்தவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
Next Article