Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

" நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது" முதலமைச்சர் #MKStalin உரை!

12:38 PM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2.85 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் படைப்பகத்தில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

" கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். கொளத்தூர் தொகுதியில் குறிப்பாக அனிதா அகாடமி விழா என்றால் புத்துணர்ச்சி பெற்று விடுவேன். கடந்த 2017ம் ஆண்டு மாணவி அனிதா உயிரை மாய்த்துக் கொண்ட போது நாமெல்லாம் பெரிய வேதனைக்கு ஆளானோம். நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்து விட்டது. அனிதா நம்மை விட்டு பிரிந்தபோது தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான, சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது. இன்று இல்லாவிட்டாலும், நாளைக்கு , நாளைக்கு இல்லாவிட்டாலும் நாளை மறு நாள் நீட் தேர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நீட் தேர்வில் தோல்வியடைந்த அனிதாவின் நினைவாக, முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் 2019ஆம் ஆண்டு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியைத் தொடங்கினோம். எல்லா வகையிலும் தமிழ்நாடு மாணவர்களை உயர்த்துவோம்.

இதையும் படியுங்கள் : Indonesia-வில் வெடித்து சிதறிய எரிமலை… 9 பேர் பலி!

பொதுமக்களுக்கு கண் சிகிச்சை அளிக்க கலைஞர் இலவச கண் மருத்துவ மையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டில் கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் 7,012 பேர் கண் சிகிச்சை பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா வகையிலும் தகுதியுடையவர்களாக மாற்றுவதே திமுக அரசின் லட்சியம். மேலும், தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். எஞ்சியவை விரைவில் நிறைவேற்றப்படும்.

அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. இந்தியாவில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிடுகிறது. கோட்டைகளில் இருந்து பிறப்பிக்கப்படும் திட்டங்கள் களத்தில் வெற்றி பெறுகிறதா? என ஆய்வு செய்வதால் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பெய்த தொடர் மழையிலும் கூட தண்ணீர் தேங்காமல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
anithaCMOTamilNaduDMKMKStalinNEETNews7Tamilnews7TamilUpdatesTamilNadu
Advertisement
Next Article