Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்! கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடு!

04:47 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய தமிழகத்தை சேர்ந்த
முத்தமிழ்ச்செல்வி கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடுள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி (34). இவர் கடந்த 24ம் தேதி அண்டார்டிகா சிகரத்தின் 4,892 மீட்டர் (16,050 அடி) உயரமுள்ள மலையின் உச்சியை அடைந்தார். இதனால் அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண்ணாக சாதனை படைத்துள்ளார் முத்தமிழ்ச்செல்வி.

தற்போது அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் கீழே வர முடியாமல் தவிப்பதாகவும் அங்கு உணவு உள்ளிட்ட தேவைகளை பெற முடியாமல் கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், கடுமையான சவால்களுக்கு மத்தியில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வர முடியாமல் தவிப்பதாகவும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags :
AustraliaMountVinsonTamilNaduVirudhunagar
Advertisement
Next Article