Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CineUpdate | ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

07:43 PM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்தார்.

படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
cinema updateMookuthi AmmanMookuthi Amman 2nayantharanews7 tamilRJ BalajiRowdy PicturesSundar CTamil Cinama
Advertisement
Next Article