Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CineUpdate - அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் & சல்மான்கான்?

12:17 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவின் 2 பெரிய நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க, இயக்குநர் அட்லீ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அக்டோபரில் அதற்கான ப்ரீ-புரொடக்ஷன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக இளம் இயக்குநர்களுடன் கை கோர்த்து, பான் இந்தியா படங்களில் நடிக்க கவனம் செலுத்து வருகிறார். விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ், கல்கியில் நாக் அஸ்வின் என தற்போது அட்லீ உடன் இணைகிறார்.

தற்போது நடிகர் சல்மான்கான் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிக்கந்தர்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அட்லியின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
atleeKamal haasansalman khanSun Pictures
Advertisement
Next Article