Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயங்கள் - களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை!

11:41 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா ஆண்டுதோறும் டிச. 25-ம் தேதி உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில்,  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி தேவாலயங்களில் ஏராளமானோர் கூடியுள்ளனர். இங்கு நகரமே மின்னொழியில் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் மக்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புதுச்சேரி ஒரு சுற்றுலாத் தளமாக இருப்பதால் இங்கு பல வெளிமாநில, வெளி நாட்டு பயணிகளும் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 10 மணி முதலே கூடிவரும் இந்த கூட்டத்தால் காவல்துறை கண்காணிப்பு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன.

Tags :
ChristmasfestivalNews7TamilPuducherry
Advertisement
Next Article