எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 36 பேர் பலி..!
எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் பலியாகினர்.
02:59 PM Oct 02, 2025 IST
|
Web Editor
Advertisement
எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் மென்ஜார் ஷென்கோரா அரேர்டி மரியம் தேவாலயம் அமைந்துள்ளது. கட்டுமானம் நடைபெற்று வரும் இந்த தேவாலத்தில் இன்று அதிகாலை வழிபாட்டிற்காக மக்கள் கூடியிருந்தனர்.
Advertisement
அப்போது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.
எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். இந்நாட்டில் பாதுகாப்பு விதிமுறைகள் குறைவாக உள்ளதால் அடிக்கடி கட்டுமான விபத்துக்கள் நிகழ்கின்றன.
Next Article