Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!

11:08 AM Dec 28, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.152 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Advertisement

கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லரை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தீபாவளி, ஓணம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது.

இந்த நிலையில் கேரள மாநில பானங்கள் கழகம் (BEVCO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் மட்டும் ரூ.152.06 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.29.90 கோடி அதிகமாகும். அதாவது 2023 ஆம் ஆண்டை விட 24.50 சதவீதம் கூடுதலாக விற்பனை ஆகியுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் ரூ.54.64 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChristmasCrorefestivalKeralaliquorNewYearOccasionsalesworth
Advertisement
Next Article