'அமைதியின் பாதையை' தேர்ந்தெடுங்கள் - மணிப்பூரில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கு பயணம் மேர்கொண்டுள்ளார். இந்த பயனத்தில் இன்று சூரசந்த்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினா. இதனை தொடர்ந்து சூரசந்த்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
”மணிப்பூர் நிலம் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் நிலம். துரதிர்ஷ்டவசமாக, இந்த அழகான பகுதியில் வன்முறை நிழல் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு, நிவாரண முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். அவர்களைச் சந்தித்த பிறகு, மணிப்பூரில் நம்பிக்கை மற்றும் புதிய விடியல் உதயமாகி வருகிறது என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். எந்த இடத்திலும் வளர்ச்சி ஏற்பட அமைதி அவசியம். கடந்த பதினொரு ஆண்டுகளில், வடகிழக்கில் பல மோதல்கள் மற்றும் சச்சரவுகள் தீர்க்கப்பட்டுள்ளன. மக்கள் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
சமீபத்தில், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில், வெவ்வேறு குழுக்களுடன் ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இது இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அமைதிப் பாதையில் முன்னேறிச் சென்று, தங்கள் கனவுகளை நிறைவேற்றி, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யுமாறு அனைத்து அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நான் உங்களுடன் இருக்கிறேன், இந்திய அரசு உங்களுடன் உள்ளது, மணிப்பூர் மக்களுடன் உள்ளது.
மணிப்பூரில் வாழ்க்கையை மீண்டும் பாதைக்குக் கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வீடற்றவர்களாக மாறிய குடும்பங்களுக்கு 7,000 புதிய வீடுகளைக் கட்ட எங்கள் அரசு உதவுகிறது.மணிப்பூர் பழங்குடி இளைஞர்களின் கனவுகள் மற்றும் போராட்டங்களை நான் நன்கு அறிவேன். உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு தீர்வுகள் செய்யப்படுகின்றன. உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது, மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான நிதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரை வளர்ச்சிப் பாதையில் விரைவாக முன்னேற்ற இந்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று நான் உங்கள் அனைவருடனும் இங்கே இருக்கிறேன். தொடங்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூர் மக்களின், குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும்”
என்று தெரிவித்துள்ளார்.