“வெளிநாடு கல்வி நிறுவனங்களை மாணவர்கள் எச்சரிக்கையோடு தேர்ந்தெடுக்க வேண்டும்!” - ஆக்ஸ்போர்டு இன்ட்ரநேஷனல் நிர்வாக இயக்குநர்!
“வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆக்ஸ்போர்டு
இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் சார்பில் இங்கிலாந்தில் உயர்கல்வி
மேற்கொள்வதற்கான ‘பாத் வே’ திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர் பேசியதாவது;
“தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்புகின்றனர்.
ஆனால் முறையான அணுகு முறை இல்லாததால், அவர்களின் விருப்பம் நிறைவேறுவது இல்லை. வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்கள் விழிப்புடன் இருக்க
வேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் பயிலும்
மாணவர்களிடம் பேசி கல்வியின் தரத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பெரும்பாலும் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பிஸினஸ்
மேனேஜ்மண்ட், கம்பியூட்டர் சயின்ஸ்,பொறியியல் பாட பிரிவுகளை பயில
விரும்புகின்றனர். "பாத் வே" திட்டம் என்பது 12 மாத பயிற்சி வகுப்பு ஆகும். இங்கிலாந்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும்
வகையிலும், ஆங்கில மொழியில் அறிவு பெறும் வகையிலும் பயிற்சிகள்
வழங்கப்படும்.
இந்திய கல்வி முறையை அங்கீகரிக்காத ஐரோப்பிய கல்வி நிறுவனங்கள்
கூட "பாத் வே" திட்டம் மூலம் வழங்கப்படும் பயிற்சியை அங்கீகரித்து உள்ளது. ஒரு
வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு
பயிற்சிகள் வழங்கப்படும். ‘பாத் வே’ திட்டத்தில் பயிற்சி பெற்றபின் மாணவர்கள்
தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடரலாம்.
இணையதளங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சக்சஸ் பாயிண்ட் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜதுரை துரைசாமி,
“5 ஆண்டுகளாக ஆக்ஸ்ஃபோர்டு குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 13 முதல் 18 லட்சம் வரை கல்லூரி படிப்புக்கும் மட்டும் செலவாகும். பாத்வே மூலம் செல்லும் மாணவர்களுக்கு கூடுதலாக 8 லட்சம் வரை செலவாகும்.
இந்திய கல்விமுறையில் இருந்து வெளிநாட்டு கல்வி முறை மாறுபட்டதாக உள்ளது.
செய்முறை கல்வி அதிகம் இருப்பது ஐரோப்பிய முறை கல்வி. அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரி பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றியும் தெரிவித்து அவர்களை அதற்கு பதிவு செய்ய சொல்கிறோம்.
இந்தியாவில் இருந்து வருடத்திற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை பாத்வே
முறை மூலம் வெளிநாடுகளுக்கு படிக்க செல்கிறார்கள். வெளிநாடுகளில் உயர்கல்வி பயில தகுதி குறைவாக உள்ள மாணவர்களுக்கு, முதல் தொகுதியில் உள்ள மாணவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு, அவர்களை தயார்படுத்த இந்த செயல்முறை உதவும். இந்த பாத்வே மூலம் ஓராண்டுக்கு அவர்கள் படிக்க உள்ள துறை சார்ந்த பயிற்சிகளை கற்று கொண்டு, அதன் பின் அவர்களின் கல்வியை அங்கு தொடரலாம்.
“தமிழ்நாட்டில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிவதால் பெரிய கஷ்டம் எதுவும் இல்லை” என தெரிவித்தார்.