Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

04:50 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில்
மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.  இக்கோயில் தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.‌

அதே போன்று இந்த ஆண்டும் கொண்டாடப்படகிறது.  இதற்கான ஏற்பாடுகளை
தமிழ்நாட்டின் சார்பில் தேனி மாவட்ட நிர்வாகமும்,  கேரளாவின் சார்பில் இடுக்கி
மாவட்ட நிர்வாகத்தினரும் செய்துள்ளனர்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர்,  உணவு,  போக்குவரத்து,  மருத்துவம்,  சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன.  சுமார் 1,500 க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியிலும்,  இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

மங்கலதேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  தமிழ்நாடு - கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர்.

Tags :
#chitra pournamidevoteesKeralaMangaladevi Kannagi Templetamil nadu
Advertisement
Next Article