Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

12:32 PM Apr 13, 2024 IST | Web Editor
Advertisement

சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், தீப்பொட்டி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால்,  தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கழுகுமலை எட்டயபுரம் இளையரசனேந்தல்
திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட் அதாவது சார்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.  இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் . இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்ற தீப்பெட்டிகள்  வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இதையும் படியுங்கள் : சென்னை - மொரிஷியஸ் இடையே விமான சேவை - 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடக்கம்!

இந்நிலையில் ரூ. 20க்கு கீழ் உள்ள சிகரெட் லைட்டர்களை விற்பனை செய்ய மத்திய
அரசு தடை விதித்துள்ள போதிலும் சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி
செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் ரூ. 10க்கு விற்கப்படுவதால்
வடமாநிலங்களில் தீப்பெட்டி விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இதனால் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி குறைந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை லாபகரமாக நடத்த முடியாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.  மேலும் உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் ஸ்டாக் அதிகமாக இருப்பதால், மூலப் பொருள்கள் வாங்கிய நபர்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலைக்கு தற்காலிகமாக தீர்வு கானும் பொருட்டு இன்று இன்று முதல்
ஏப்ரல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி,  கடலையூர், கழுகுமலை,  எட்டயபுரம்,  இளையரசனேந்தல்,  குருவிகுளம்,  திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்பட்டது.  அதன்படி, இன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளனர்.  அனைத்து தீப்பிடி
தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.6 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
#affectedChinese lighterIndustryMatchboxplastic lighterstrikeThoothukudi
Advertisement
Next Article