Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!" - சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!

01:13 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

சீனாவில் செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் முதலாளிகளும் மற்றும் சக ஊழியர்களும் விற்பனை செய்யப்படும் என்ற பதிவு இடம்பெற்றது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பொதுவாக பொருட்களை விற்பனைக்கு விட்டுப் பார்த்திருப்போம். ஆனால், சீனாவில்  பொருட்களை விற்கும் ஈ-காமர்ஸ் தளத்தில் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்கள் என வேலை ஆட்களை விற்பனை செய்யும் வேடிக்கையான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பலருக்கு பிடிக்காத வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி பிடிக்காத வேலையை செய்யும்போது கட்டாயம் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

அதேபோல பிடிக்காத முதலாளிகள், சக ஊழியர்கள், டாக்ஸிக்கான பாஸ் மற்றும் சக ஊழியர்கள் கிடைக்கும்போது வேலை சூழலே எதிர்மறையாக மாறிவிகிறது. இந்த மன அழுத்தத்தை சமாளிக்க பாட்டுக் கேட்பது, மனதில் தோன்றுவதை எழுதுவது,மனம்விட்டு பேசுவது, சாப்பிடுவது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.

இதற்கிடையே, தற்போது சீனாவில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் ஊழியர்கள் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்கள் மற்றும் தங்களது  வேலைகளைக் கூட விற்பனைக்குப் பட்டியலிடுகிறார்கள். பிரபல அலிபாபா நிறுவனத்தின் செகண்ட் ஹேண்ட் ஈ-காமர்ஸ் தளமான சியான்யூ என்ற தளத்தில் தான் இந்தக் வேடிக்கை நிகழ்வு நடந்துள்ளது.

இதையும் படியுங்கள் : உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!

அங்குப் பலரும் வேலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக் குறைக்க இதுபோல தங்கள் முதலாளிகளை விற்கிறார்கள். அப்படி தான் பெண் ஒருவர் தனது வேலையை ₹ 91,000க்கு பட்டியலிட்டுள்ளார். இதில் மாதம் ₹ 33,000 சம்பளம் கிடைக்கும் என்றும் மூன்று மாதங்களில் போட்ட காசை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்றும் பதிவிட்டுள்ளார். இவர் மட்டுமின்றி இவரைப் போலவே பலரும் தங்கள் முதலாளிகளை விற்பனைக்கு பட்டியிலிட்டுள்ளனர்.

மேலும் இந்த பதிவில், யாரும் யாரையும் வாங்கவும் மாட்டார்கள், விற்கவும் மாட்டார்கள். அதேபோல் பயனாளர்களும் ஆர்டர் செய்ய மாட்டார்கள் எனவும், ஆர்டர் செய்தாலும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
BosseschinaChinese EmployeesColleaguesonlineSelling
Advertisement
Next Article