Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக வரைபடத்திலிருந்து 'இஸ்ரேலை' நீக்கிய சீன நிறுவனங்கள்!

03:46 PM Oct 31, 2023 IST | Web Editor
Advertisement

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

Advertisement

அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர்.  இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர். ஹமாஸ் இஸ்ரேலிய பிரதேசத்தை தாக்கி 229 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.

3 வாரங்களைக் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

தரை மார்க்கமாக நுழைந்து காஸா பரப்புக்கு மேலேயும், காஸா பதுக்குக் குழிக்குள்ளும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் நீடிக்கும் சூழலே இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விடியோக்களில், மத்திய காஸாவில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கியும், புல்டோஸரும் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, அந்தத் சாலையை இஸ்ரேல் கைப்பற்றி போக்குவரத்தை முடக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

அந்த விடியோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹாகரி அளித்த பதிலில், ”எங்களது தரைவழி நடவடிக்கை விரிவுபடுத்து வருகிறோம். இருந்தாலும், படையினர் நிறுத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்களை நாங்கள் வெளியிடப்போவதில்லை’ என்றார்.

செய்தியாளா் ஒருவா் பதிவு செய்து வெளியிட்டுள்ள அந்த விடியோவில், சாலைத் தடையை நோக்கி சென்ற கார் ஒன்று, தடையைக் கண்டதும் வேகமாகத் திரும்பிச் செல்லும் காட்சியும், அந்தக் காரை இஸ்ரேல் பீரங்கி குறிவைத்து தாக்கி அழிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இது தொடா்பாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் பின்னர் வெளியிட்ட அறிக்கை, காரிலிருந்த 3 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தது.

இதற்கிடையே , இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்ட விடியோக்களில் காஸாவுக்குள் அந்த நாட்டுப் படையினர் மேலும் ஆழமாக ஊடுருவியுள்ளதை உறுதிப்படுத்தியது. அந்த விடியோவில், காஸாவின் கட்டடங்கள் இடையே இஸ்ரேலில் கவச வாகனங்கள் செல்லும் காட்சியும், இஸ்ரேல் வீரர்கள் வீடுகளுக்குள் சென்று தங்களது தாக்குதல் நிலைகளை அமைத்துக் கொள்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளர் ஹகாரி கூறுகையில், தரைவழித் தாக்குதலின் தீவிரத்தையும், அளவையும் தாங்கள் அதிகரித்துள்ளதாக க் கூறினார். எனினும், காஸாவுக்குள் முழுமையான தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக அவா் அறிவிக்கவில்லை.

கடந்த 24 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,300-ஐ கடந்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 7-ம் தேதியிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 8,306 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3,457-க்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மேற்குக் கரை பகுதியில் கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேல் படையினராலும், யூதக் குடியேற்றவாசிகளாலும் இதுவரை 121 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்நிலையில்,  சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement
Next Article