Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீனா : ரகசா புயலால் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

ரகசா புயலால் சீனாவில் 5 லட்சம் வீடுகளில் மின்சாரமா துண்டிக்கப்பட்டுள்ளது.
07:48 AM Sep 26, 2025 IST | Web Editor
ரகசா புயலால் சீனாவில் 5 லட்சம் வீடுகளில் மின்சாரமா துண்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement

தென் சீனக்கடலில் உருவான ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து ரகசா புயலால் மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது.

Advertisement

குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரகசா புயல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியது. இதனை தொடர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறியது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்காக பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அந்தப் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :
chinaPowerCutRagasa Typhoonstormthaivaan
Advertisement
Next Article