Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தைவான் எல்லையில் 2-வது நாளாக போர்ப்பயிற்சி நடத்திய சீனா!

12:36 PM May 24, 2024 IST | Web Editor
Advertisement

தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளை நடத்தி உள்ளது. 

Advertisement

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது.  ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கமாகமே சீனா கருதுகிறது.  எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி,  சீனா அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில்,  தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று,  கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.  அப்போது பேசிய அவா்,  "தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும்.  தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும்.  இந்த அரசு இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும்" என்று உறுதியளித்தாா்.

மேலும், சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பலமுறை முன்வந்த போதிலும், சீனா மறுத்துவிட்ட நிலையில் தைவானின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று லாய் வலியுறுத்தினார்.  இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சீனா, லாய்வை "பிரிவினைவாதி" என்று கூறி, அவரது தொடக்க உரையை விமர்சித்தது.

மேலும், ‘தைவானின் சுதந்திரம் என்பது முடிந்துபோன ஒன்று’ என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறினாா்.  இந்த நிலையில், தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளை நடத்தி உள்ளது.  தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக இந்த  போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.  இதில் ராணுவம், கடற்படை, விமானப் படை, ஆகியவை பங்கேற்றுள்ளன.

Tags :
chinaMilitaryTaiwan
Advertisement
Next Article