Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் #SocialMedia பயன்படுத்த தடை... எங்கு தெரியுமா?

04:05 PM Nov 21, 2024 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலரும் சமூக வலைதளங்களுக்குள் மூழ்கி உள்ளனர். புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு லைக் பெறுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பலர் பொழுது போக்கிற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். பள்ளி மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், அவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கூறுகையில், " சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். இந்த கட்டமைப்பிற்கு சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது" என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் பேசுகையில், "சிறுவர்களின் நலனுக்காக 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றியுள்ளோம்" என்றார்.

Advertisement
Next Article