Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Apple, #Google, #Microsoft நிறுவனங்களுக்கு சென்ற முதலமைச்சர் #MKStalin! “தமிழ்நாட்டை ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி மையமாக்க உதவும் சந்திப்பு!”

09:49 AM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பு தமிழ்நாட்டை ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி மையமாக்க உதவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதற்காக ஆகஸ்ட் 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து  விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 29-ஆம் தேதி அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்நாளான நேற்று (30.08.2024) Nokia, PayPal, Yield Engineering Systems, Microchip, Infinx, Applied Materials ஆகிய 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் முதல் நாளிலேயே ரூ.900 கோடி முதலீடுகள் பெறுவது உறுதிசெய்யப்பட்டது. மேலும் 4,100 வேலைவாய்ப்புகள் உருவாக்கபடவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள், மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு சென்றார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் கூறியிருப்பதாகவது:

வியக்க வைக்கும் ஆப்பிள், கூகுள், மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களை பார்வையிட்டு, அந்நிறுவன அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி மையங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்ற இந்த சந்திப்பு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேரிவித்தார்.

Tags :
AmericaappleCM MK StalinCMO TamilNaduDMKDMK Govtgooglemicrosoftnews7 tamilTN GovtUSA
Advertisement
Next Article