Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் #MKStalin!

12:18 PM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisement

சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், 21 மாவட்டங்களில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள் : #GoldRate | தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறை மூலம் 3% இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச, தேசிய அளவிலான போட்டியில் வென்றோருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தார். பணி நியமன ஆணைகள் வழங்கியதற்காக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement
Next Article