Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

06:25 PM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisement

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா 2 நாட்கள் கன்னியாகுமரியில் கொண்டாடப்பட உள்ளன. 

அதேபோன்று நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டு வந்தது. கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து, திறப்புக்கு தயாரானது. இந்த நிலையில், இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிலையில், வெள்ளி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் இன்று கன்னியாகுமரிக்கு வந்தார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Next Article