Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

07:27 PM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement

‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

Advertisement

பொங்கல் பண்டிகையை ஒட்டி, 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி இன்று தொடங்கி வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலய திடலில் தொடக்க விழா நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தொடக்க விழாவினைத் தொடர்ந்து நாளை (ஜன.14) முதல் 17-ம் தேதி வரை தினமும் மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, சென்னையின் 18 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நடைபெற உள்ளது.

'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நடைபெறும் இடங்கள் : 

பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், ஏகாம்பரநாதா் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகா் பூங்கா, கே.கே.நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி.விளையாட்டுத் திடல்.

விழா நடைபெறும் இடங்களில் அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Next Article