Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin..!

11:57 AM Dec 07, 2024 IST | Web Editor
Advertisement

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Advertisement

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.

தனியார் ஆம்னி பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர்களின் வசதிக்காக முடிச்சூர் அருகே, 5 ஏக்கா் பரப்பில் ஒரே நேரத்தில் 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு தனியார் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100 போ் தங்கும் அளவுக்கு இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மருத்துவ சிகிச்சை மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisement
Next Article